Greetings from Borella Bible Baptist Church, Colombo 8, Sri Lanka. We built this website by the grace of the Lord Jesus Christ. He is our Savior, Redeemer, and our God. Borella Bible Baptist Church is a solid Bible preaching, Bible teaching and soul winning church. We welcome all of you to come and worship the Lord with us. If you are in our town, please visit us. We would be happy to have you in the services in which we strive to honor our Lord Jesus Christ. Please email us as you have visited this website. We would like to have a record of your visit. Every week we visit new people in their homes and distribute gospel tracts with the heart to win precious souls to Christ. Please pray for us and stand with us to reach the unreached for Christ. If you need any counseling or prayer, please feel free to contact us. Please click the way to Heaven page to find how to get to Heaven. May God Bless you.
பிரியமான நண்பர்களே !
இலங்கையில் இருக்கும் பொரளை பைபிள் பப்டிஸ்ட் சபையிலிருந்து வாழ்த்துக்கள்.
கிறிஸ்துவின் அளவற்ற அன்பினாலும் கிருபையினாலும் இந்த இணையதளத்தை நாம் வடிவமைத்துள்ளோம். கிறிஸ்து எமது இரட்சகராகவும் விடுவிக்கிறவராகவும், கடவுளாகவும் இருக்கின்றார்.
பொரளை பைபிள் பப்டிஸ்ட் சபை வேதாகமத்தை முழுமையாக விசுவாசிப்பதோடு,
வேதாகமத்தை மட்டுமே கற்பிக்கின்றது, பிரசங்கிக்கின்றது.
நீங்கள் எம்முடன் இணைந்து தேவனை ஆராதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம். இது தேவனை கனப்படுத்தும். பொரளை பைபிள் பப்டிஸ்ட் சபை ஒரு ஆத்தும ஆதாய சபையாகும். ஒவ்வொரு வாரமும் மக்களை சந்திப்பதிலும் கிறிஸ்துவின் சுவிசேஷ துண்டுப்பிரதிகளை கொடுப்பதிலும் மும்முரமாக செயல்படுகின்றது. எமக்கு உங்கள் ஜெபம் முக்கியமானது. இன்னும் இழந்து போனவர்களை ஆதாயப்படுத்தும் சேவையில் நிற்கும் எங்களை உங்கள் ஜெபத்தில் தாங்கவும், எங்களுடன் சேர்ந்து நிற்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுக்கு ஏதாவது ஆலோசனைகள், ஜெபங்கள் தேவையானால், உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் உதவி செய்ய ஆயத்தமாக இருக்கின்றோம். தயவுசெய்து பரலோகத்திற்கான வழி என்ற பக்கத்தை கிளிக் செய்து, பரலோகத்திற்கான வழியை கண்டுகொள்ளுங்கள். கர்த்தர்தாமே உங்கள் ஆசிர்வதிர்ப்பாராக.
கிறிஸ்துவின் சேவையில்,
பாஸ்டர் கௌரீஸ்வரன் தியாகராஜா
|